Tag: ஹைக்கூ

வலிகள்

வலிகள்

வலிகளை நேசிக்கிறேன் வலிகளை ரசிக்கிறேன் வலிகளை வேண்டுகிறேன் வலிகள் கவிதைகளாய் உருமாறுவதால்!

மலர் வனம்

மலர் வனம்

நிச்சயமாகிவிட்டது! மலர் வனம் வளர்க்கிறேன்  முதலிரவில் பூவிதழ்கள் நாம் நசுக்க...

தென்னங்கீற்று

தென்னங்கீற்று

தென்னங்கீற்றுகள் கிச்சு கிச்சு மூட்டிட  தென்றல் காற்று சிலிர்த்து சிரித்திட  பூப்படைந்த பூக்கள் சில கனிந்தன!

கை நீட்டினேன் 

கை நீட்டினேன் 

உன் கைகோர்க்க என் கை நீட்டினேன்  கண்டுகொள்ளாமல் முன் நடந்தாய்  ஆறுதலாய் வருடிச் சென்றது காற்று!

மௌனம் சம்மதம்!

மௌனம் சம்மதம்!

ஒருதலைக் காதலியின் பதில் கிடைக்கா காதலன் ஒருவன் தனக்குத் தானே சொல்லிக்கொண்ட சமாதானமே "மௌனம் சம்மதம்!"

பூ

பூ

தன் மீது மோதியதால் காற்றைத் தன் வாசம் சுமக்க வைத்தது பூ!

பாசாங்கு

பாசாங்கு

பாசம் என்றெண்ணிப் பழகினேன்  பாசாங்கு என்றுணர்ந்த பின்பும் பாவி மனம் வெறுக்க மறுக்கிறது!

கன்னத்தின் கோடுகள்

கன்னத்தின் கோடுகள்

"நேற்றிரவு கோரைப்பாயில் படுத்தாயா? கன்னத்தில் இத்தனை கோடுகள்!" அக்கறையாய் விசாரித்த தோழியிடம் எப்படி சொல்வேன் அவை உன் உதட்டு வரிகளின் தடமென்று!

ஆசைகள்

ஆசைகள்

பல ஆசைகளை சொல்லாமலே வாழ்ந்தேன் கொண்டாடினர் என்னை 'சந்நியாசி' என!

Page 1 of 2 1 2

Popular