Tag: தமிழ் கவிதை

காதல் நீர்

காதல் நீர்

சுடுதரை மேல் படர்ந்ததால் ஆவியாய் மாண்டது தண்ணீர் மேகமாய் மீண்டு வரும் சுடுதரையை மீண்டும் குளிர செய்ய தண்ணீர் கொண்டது காதலல்லவோ!

கார்மேகம்

கார்மேகம்

மழை வரும் போல் இருந்தது உலர்துணிகள் எடுக்க மொட்டை மாடி விரைந்தேன் சென்ற நொடி சிலையானேன் கார்மேகக் குவியல் கவின் கண்டு எக்கணமும் வெடித்து விழ எத்தனித்த ...

வலிகள்

வலிகள்

வலிகளை நேசிக்கிறேன் வலிகளை ரசிக்கிறேன் வலிகளை வேண்டுகிறேன் வலிகள் கவிதைகளாய் உருமாறுவதால்!

மலர் வனம்

மலர் வனம்

நிச்சயமாகிவிட்டது! மலர் வனம் வளர்க்கிறேன்  முதலிரவில் பூவிதழ்கள் நாம் நசுக்க...

மௌனம் சம்மதம்!

மௌனம் சம்மதம்!

ஒருதலைக் காதலியின் பதில் கிடைக்கா காதலன் ஒருவன் தனக்குத் தானே சொல்லிக்கொண்ட சமாதானமே "மௌனம் சம்மதம்!"

பூ

பூ

தன் மீது மோதியதால் காற்றைத் தன் வாசம் சுமக்க வைத்தது பூ!

கோப உள்ளம்

கோப உள்ளம்

பற்றி எரியும் கானகத்தில் பட்டாம்பூச்சி தான் காணுமோ! கோபம் குடிகொண்ட உள்ளத்தில் மகிழ்ச்சிதான் தோன்றுமோ?

கடிகாரம்

கடிகாரம்

தினமும் காலதாமதமாக வேலைக்கு வரும் அதிகாரி.. அவர் நேரம் தவறுதலை சரியாக பறைசாற்றியது.. அவர் அலுவலக சுவற்றில் என்றோ நின்ற கடிகாரம்...!

அவர்கள்

அவர்கள்

காலமின்மையைக் காரணம் கூற கூச்சமாய் தான் இருந்தது.. ஆனால் வேறென்ன செய்ய? எனக்காய் காத்திருக்கும் அவர்களின் கணங்களும் ரணங்கள் தானே.. "நிச்சயம் உங்களுக்காய் ஒரு நாள்!" மீண்டும் ...

Popular