காதல் நீர்
சுடுதரை மேல் படர்ந்ததால் ஆவியாய் மாண்டது தண்ணீர் மேகமாய் மீண்டு வரும் சுடுதரையை மீண்டும் குளிர செய்ய தண்ணீர் கொண்டது காதலல்லவோ!
சுடுதரை மேல் படர்ந்ததால் ஆவியாய் மாண்டது தண்ணீர் மேகமாய் மீண்டு வரும் சுடுதரையை மீண்டும் குளிர செய்ய தண்ணீர் கொண்டது காதலல்லவோ!
நல்லவேளை இதயத்தை இறைவன் உள்ளே வைத்தான் இல்லையெனில் நித்தமும் நான் உனை நினைப்பதை உலகு அறிந்திருக்கும் நீயும் கூட!
நிச்சயமாகிவிட்டது! மலர் வனம் வளர்க்கிறேன் முதலிரவில் பூவிதழ்கள் நாம் நசுக்க...
உன் கைகோர்க்க என் கை நீட்டினேன் கண்டுகொள்ளாமல் முன் நடந்தாய் ஆறுதலாய் வருடிச் சென்றது காற்று!
ஒருதலைக் காதலியின் பதில் கிடைக்கா காதலன் ஒருவன் தனக்குத் தானே சொல்லிக்கொண்ட சமாதானமே "மௌனம் சம்மதம்!"
பாசம் என்றெண்ணிப் பழகினேன் பாசாங்கு என்றுணர்ந்த பின்பும் பாவி மனம் வெறுக்க மறுக்கிறது!
"நேற்றிரவு கோரைப்பாயில் படுத்தாயா? கன்னத்தில் இத்தனை கோடுகள்!" அக்கறையாய் விசாரித்த தோழியிடம் எப்படி சொல்வேன் அவை உன் உதட்டு வரிகளின் தடமென்று!
உள்ளத்தில் தானே ஒளித்து வைத்தேன் கண்களில் எங்ஙனம் கண்டுபிடித்தாய் காதலை!
ஆயிரம் முறை தாண்டி போகிறாயே, ஒரு முறை தீண்டி போனால் தான் என்ன? ஒரு தலை காதலின் மௌன கெஞ்சல்!