காலமின்மையைக் காரணம் கூற
கூச்சமாய் தான் இருந்தது..
ஆனால் வேறென்ன செய்ய?
எனக்காய் காத்திருக்கும் அவர்களின்
கணங்களும் ரணங்கள் தானே..
“நிச்சயம் உங்களுக்காய் ஒரு நாள்!”
மீண்டும் வெற்று வாக்குக் கொடுத்தேன்..
தாண்டி செல்லும் போதெல்லாம்
என்னை வெறித்து பார்க்கும் அவர்களை..
#வாசிக்கப்படாபுத்தகங்கள்
Discussion about this post