• Short Stories
  • Nano Stories
  • English Articles
  • Tamil Poems
  • Thirukural Stories
  • Quotes
Menu
  • Short Stories
  • Nano Stories
  • English Articles
  • Tamil Poems
  • Thirukural Stories
  • Quotes
  • Short Stories
  • Nano Stories
  • English Articles
  • Tamil Poems
  • Thirukural Stories
  • Quotes
Menu
  • Short Stories
  • Nano Stories
  • English Articles
  • Tamil Poems
  • Thirukural Stories
  • Quotes
Home Thirukural Stories ஊக்கமுடைமை

உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல்

4 years ago
in ஊக்கமுடைமை
உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல்

குறள் # 596

 

பால்: பொருட்பால்

அதிகாரம்: ஊக்கமுடைமை (Energy)

 

உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது

தள்ளினுந் தள்ளாமை நீர்த்து.

 

பொருள்:

எண்ணுவதெல்லாம் உயர்வைப்பற்றியே எண்ண வேண்டும், அவ் வுயர்வுக் கைகூடாவிட்டாலும் அவ்வாறு எண்ணுவதை விடக்கூடாது.

 

Translation:

Whate’er you ponder, let your aim be loftly still,

Fate cannot hinder always, thwart you as it will.

 

Meaning:

In all that a king thinks of, let him think of his greatness; and if it should be thrust from him (by fate), it will have the nature of not being thrust from him.

 

Transliteration:

uLLuva thellaam uyarvuLLal matradhu

thaLLinunh thaLLaamai neerththu

 

நான் ராஜாவாகப் போகிறேன்

 

“நான் ராஜாவாகப் போகிறேன்” என்று மணிமாறன் கூறியதைக் கேட்ட வகுப்பறை சிரிப்பில் எதிரொலித்தது. மாணவர்களின் கேலி சிரிப்பைக் கேட்காதது போல் தலை நிமிர்ந்து நின்று கொண்டிருந்தான் மணிமாறன். “வளர்ந்து என்ன ஆகப் போகிறீர்கள்?” என்று கேட்ட ஆசிரியரோ திகைத்து நின்றார். அதுவரை “மாறா, மாறா” என்று அழைத்த நண்பர்கள் அன்றிலிருந்து அவனை “ராஜா” என்று அழைக்கத் தொடங்கினர்.

அதிகாலை வேளையில், மாறனின் நண்பர்கள் உறங்கிக் கொண்டிருக்கும் பொழுது, மாறன் உடற்பயிற்சி செய்வான். அவனுடைய நண்பர்கள் அரட்டை அடித்துக் கொண்டிருக்கும் பொழுது, மாறன் மட்டும் அற நூல்களை படித்துக் கொண்டிருப்பான். அவன் நண்பர்கள் விளையாடிக் கொண்டிருக்கும் போது, மாறன் போர்க்கலைகள், வில்வித்தைகள் பயின்று கொண்டிருப்பான். அவ்வாறாக அவனுடைய எண்ணமும் முயற்சியும் அவனது உயர்ந்த குறிக்கோளை அடையவே இருந்தன. ஆனால் சக மாணவர்கள் அவனை கேலி செய்து கொண்டே இருந்தனர்.
இப்படியே வருடங்கள் உருண்டோடின. மாறனுக்கும் 12 வயது ஆயிற்று. அவன் ராஜா ஆவதற்குரிய குணங்களை வளர்த்துக் கொண்டே இருந்தான். எஞ்சிய நேரத்தில் சத்திரத்தில் வந்து தங்குபவர்களுக்கு உணவு செய்து கொடுக்கும் தனது தாய்க்கு உதவினான். சிறிது காலமாகவே அவர்களது ஊரில் திருடர்கள் தொல்லை அதிகமாகி வந்தது. என்ன செய்தும் காவலர்களால் கூட திருடர்களை பிடிக்க முடியவில்லை. அந்தப் பனி காலத்தில் அன்று சத்திரத்திற்கு புதிதாக இரண்டு வழிப்போக்கர்கள் வந்தனர். அவர்களுக்கு சாயங்காலம் சூடான பானம் கொடுத்துக் கொண்டிருந்தான் மதிமாறன். அப்போது “ராஜா, ராஜா” என்று கூறிக்கொண்டே இரண்டு சிறுவர்கள் வந்தனர்.அதைக்கேட்டு வழிப்போக்கர்கள் இருவரும் திடுக்கிட்டு விழித்தனர். அந்த இரண்டு சிறுவர்கள் பாலகுமாரன் மற்றும் கதிரேசன். அதில் பாலகுமாரன் மாறனின் நண்பன். கதிரேசன் பாலகுமாரனின் பக்கத்து வீட்டு பையன். கதிரேசன் மாறனிடம் “மாறா, நான் கடந்த வாரம் ஊருக்கு செல்லும்போது, எனது பிறந்தநாள் பரிசாக தாத்தா தந்த பொக்கிஷ பெட்டியை பத்திரமாக வைத்துக் கொள்கிறேன் என்று பாலா வாங்கினான். ஆனால் நான் இன்று திரும்பி வந்து கேட்கும் பொழுது அதை திருடர்கள் திருடி விட்டார்கள் என்று கூறுகிறான். நீயே அவனிடம் விசாரி” என்று முறையிட்டான்.
பொறுமையாக கேட்ட மாறன் பாலனை நோக்கி “என்ன நடந்தது?” என்று விசாரித்தான். அதற்கு பாலா “நான் கதிரிடம் பொக்கிஷ பெட்டியை வாங்கியது உண்மைதான். ஆனால் திருடர்கள் தொல்லை அதிகமாக இருப்பதால் அதை பத்திரமாக ஊர் எல்லையில் உள்ள பாழடைந்த மண்டபத்தின் முன் இருக்கும் அசோக மரத்தின் அடியில் புதைத்து வைத்திருந்தேன். ஆனால் இன்று அதை போய் பார்த்தபோது பெட்டி அங்கு இல்லை” என்று பதிலளித்தான். உடனே மாறன் “அந்த சிவப்பு நிற மலர்கள் கொத்து கொத்தாக பூக்குமே, அந்த மரமா?” என்று வினவினான். உடனே பாலன் “ஆமாம் அதே தான். நான் கூட மரத்தில் இருந்து சில பூக்களைப் பறித்து புதைத்த இடத்தை மூடி வைத்தேன்” என்றான்.
அதைக்கேட்டு கோபமுற்ற மாறன் “பாலா, அந்த மரத்தில் பூக்கள் கோடை காலத்தில் மட்டுமே பூக்கும். இந்தப் பனிக்காலத்தில் பூக்காது. ஆகவே நீ பொய் சொல்கிறாய் என்பது தெளிவாகத் தெரிகிறது. மரியாதையாக கதிரிடம் வாங்கிய அவனுடைய பெட்டியை உடனே திரும்ப கொடுத்து விடு” என்று கூறினான். அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பாலா “மாறா, நான் உன் நண்பன் அல்லவா” என்று தழுதழுத்தான். ஆனால் மாறனோ உரத்த குரலில் “ஒரு சிறந்த ஆட்சியாளன் எவ்வளவு நெருங்கிய நட்பு ஆனாலும் நியாயம் பக்கமே நிற்க வேண்டும்” என்று கம்பீரமாக உரைத்தான். அதைக் கேட்ட வழிப்போக்கர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து நகைத்தனர்.
அன்று இரவு நடு நிசியில் விழித்தான் மாறன். சத்திரத்தில் அனைவரும் நன்றாக தூங்கிக் கொண்டிருப்பதை உறுதிப்படுத்தினான். ஆனால் புதிதாக வந்த வழிப்போக்கர்களை மட்டும் காணவில்லை. சந்தேகத்துடன் ஒரு கைத்தடியை எடுத்துக் கொண்டு ஊருக்குள் காவல் காக்க போனான். ஊருக்கு நடுவே ஒரு வீட்டில் கொள்ளையர்கள் திருடிக் கொண்டு வெளியே வருவதைக் கண்டான். கொஞ்சம்கூட பயமில்லாது அவர்களை எதிர்த்து சண்டையிட்டான். அவர்கள் பதிலுக்கு இவனை தாக்க முயன்றபோது திடீரென்று அங்கு வந்த வழிப்போக்கர்கள் திருடர்களை அடித்து போட்டனர். பின்னர் மாறனும் அந்த இரண்டு வழிப்போக்கர்களும் கொள்ளையர்களை அடித்து மரத்தில் கட்டி வைத்தனர். பின்னர் வழிப்போக்கர்கள் மாறனை பார்த்து “நீ இந்த நேரத்தில் இங்கு என்ன செய்கிறாய்?” என்று கேட்டனர். அதற்கு மாறன் “நான் எங்கள் ஊரை கொள்ளையர்களிடம் இருந்து பாதுகாக்க வந்தேன். நேற்று இந்த கொள்ளையர்கள் காவலர்களே அடித்துப்போட்டு தப்பித்து விட்டனர்” என்று பதிலளித்தான். சிரித்துக்கொண்டே ஒரு வழிப்போக்கர் மாறனை தட்டிக் கொடுத்தார். பின் இருவரும் மாறுவேடத்தக் கலைத்தனர். அவர்கள்தான் ராஜா நெடுஞ்செழியனும் முதல் மந்திரியும். நெடுஞ்செழியன் மாறனை பார்த்து “சிறுவனே, உனது தைரியத்தையும் அறிவையும் கண்டு நான் வியக்கிறேன். நீ முறையான பயிற்சி செய்ய என்னுடன் அரண்மனைக்கு வா” என்று அழைத்துச் சென்றார்.
அங்கு மாறன் எல்லா போர்க்கலைகளையும், உத்திகளையும் திறம்பட பயின்றான். தன் இளம் வயதிலேயே படைத்தளபதி ஆனான். மாறனின் தலைமையில் ஒரு சிறந்த படை உருவாகியது. அதேசமயம் அரசருக்கும் சிறந்த ஆலோசகராக விளங்கினான். சிலசமயம் அரசர் தீர்த்து வைக்க சிரமப்பட்ட சிக்கல்களை எல்லாம் சுலபமாக தீர்த்தான். நெடுஞ்செழியன் மாறனை கண்டு பெருமிதம் கொண்டார். இந்நிலையில் தூரத்து தேசத்தில் இருந்து ஒரு பெரிய படை ஒவ்வொரு நாடாக போரிட்டு வென்று கொண்டிருந்தது. அவர்கள் வெகு விரைவிலேயே தங்கள் நாட்டை தாக்கப் போவதாக ராஜா நெடுஞ்செழியனுக்கு தகவல் கிடைத்தது. ஆனால் அவருக்கோ வயதாகிக் கொண்டிருந்தது; உடல்நிலையும் மோசமாகிக் கொண்டே போனது. மாறன் நேராக அவரை சந்தித்து “அரசே, கவலை கொள்ளாதீர்கள். நிச்சயம் நாம் போரிட்டு அவர்களை வெல்வோம்” என்று கூறிவிட்டு படையை திரட்டினான். அவர்களுக்கு கடுமையான பயிற்சி கொடுத்து, ஊக்கம் அளித்து போர்க்களத்திற்கு சென்றனர். எதிரி நாட்டுப் படை தங்களை விட பெரிய படையாக இருந்தாலும், பல நாடுகளை ஜெயித்து வந்தாலும், மாறனும் அவனது படைவீரர்களும் திறமையாக போரிட்டு பல யுத்திகளை கையாண்டு அவர்களை வீழ்த்தினர். அனைவரும் மாறனை வெகுவாக பாராட்டி போற்றினர்; தூக்கிக் கொண்டாடினர்.
மிகவும் மகிழ்ந்த ராஜா நெடுஞ்செழியன் “இந்த அரியாசனத்திற்கு உன்னை விட பொருத்தமானவன் இல்லை. நிச்சயம் நீ சிறந்த ஆட்சியாளனாக வருவாய் என்று நம்புகிறேன்” என்றார். மாறன் இளவரசியை திருமணம் செய்துகொண்டு ராஜாவாக முடிசூட்டப்பட்டான். அவ்வாறாக மாறன் கண்ட பெரிய கனவு அவனுடைய கடும் முயற்சியால் நிறைவேறியது. ஒரு காலத்தில் அவனை “ராஜா, ராஜா” என்று கேலியாக கூப்பிட்ட அனைவரும் மணிமாறன் ராஜாவான பின் அவன் முன் கைகட்டி தலை வணங்கி நின்றனர்.
ஆகவே குழந்தைகளா, உங்கள் எண்ணங்கள் எல்லாம் சிறந்ததாகவே உயர்ந்ததாகவே இருக்கவேண்டும். யார் உங்களை கேலி செய்து உங்கள் ஊக்கத்தைக் கெடுக்க நினைத்தாலும் நீங்கள் அதை கண்டுகொள்ளாதீர்கள். உங்களுடைய எண்ணமும் செயலும் அந்த உயர்ந்த குறிக்கோளை நோக்கியே இருக்க வேண்டும். நிச்சயம் ஒரு நாள் உங்கள் கனவு நினைவாகும். அன்று உங்களை தூற்றியவர்கள் எல்லோரும் உங்களை போற்றுவார்கள். ஒருவேளை அது நிறைவேறாது போனாலும், நிச்சயம் உங்கள் முயற்சி உங்களை மற்றவர்களை விட உங்களை சிறந்த இடத்திற்கு கொண்டு செல்லும். உயர்ந்த சிந்தனை கொள்ளுங்கள். உயர்ந்து நில்லுங்கள்.

 

 

குழந்தைகள் இக்கதையைக் கேட்டு மகிழ:

https://anchor.fm/athila-nabin/episodes/—–ep0747

 

 

 

 

Tags: moralstoriesThirukkuraluLLuva thellaam uyarvuLLal matradhu thaLLinunh thaLLaamai neerththuஉள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது தள்ளினுந் தள்ளாமை நீர்த்துஊக்கமுடைமைகதைகள்குறள் # 596திருக்குறள்
ShareTweetSend

Discussion about this post

Popular

காதல் நீர்

காதல் நீர்

6 months ago
இதயம் உள்ளே

இதயம் உள்ளே

7 months ago
கார்மேகம்

கார்மேகம்

7 months ago
Appreciate

Appreciate

7 months ago
  • About Me
  • Privacy Policy
  • Disclaimer
Facebook-f Instagram Linkedin-in

Copyright © 2024 · Athila Nabin

Website Design & Developed by Indian Web Creations

No Result
View All Result
  • About Me
  • Contact
  • Home

© 2025 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.